உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்...அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும் : இலவச மின்சாரத் திட்டம் ரத்துக்கு வைரமுத்து எதிர்ப்பு

சென்னை : உரிமை மின்சாரத்தை நீக்கி, உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தை அனைத்து மாநிலங்களும் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரத்து செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.மத்திய புதிய மின்சார சட்டம் நடைமுறைக்கு வந்தால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், குடிசைகள் மற்றும் பசுமை வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர் உள்ளிட்ட சில தொழில் பிரிவினருக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ஆகியவை ரத்து செய்யப்படும்.

தமிழ்நாட்டில் 21 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரம் திட்டம் மூலம் பயன்பெற்று வரும் நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு விவசாயிகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதே போல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்துவும் தமது எதிர்ப்பை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், உரிமை மின்சாரத்தை நீக்கி

உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம்.

உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்...

அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: