வர்லாம் வர்லாம் வா...31 நாடுகளுக்கு 149 சிறப்பு விமானம்

புதுடெல்லி: வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வகையில் நாளை மறுதினம் முதல் 31 நாடுகளுக்கு 149 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் அழைத்து வருவதற்காக ‘வந்தே பாரத்’ என்ற சிறப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது இதன் மூலம், முதல் கட்டமாக கடந்த 7ம் தேதி முதல் இன்று வரை வெளிநாடுகளுக்கு 64 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 12 நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.

 

இந்நிலையில், 2ம் கட்டமாக நாளை மறுதினம் முதல் 22ம் தேதி வரை 149 சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்க உள்ளது. அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, கனடா, சவுதி அரேபியா, மலேசியா, ஓமன், கஜகஸ்தான், ஆஸ்திரேலியா, உக்ரைன், கத்தார், இந்தோனேஷியா உட்பட 31 நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்த விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் தவித்து வரும் 30 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் புரி தெரிவித்தார்.

Related Stories: