எல்லாருக்குமே ரெண்டு தான் கொடுத்து வைச்ச மவராசனுங்க...ராஜஸ்தானில் அதிசய கிராமம்

ஜெய்ப்பூர்: ‘ஒன்னுத்த வைச்சே மேய்க்க முடியல... இவனுங்க மட்டும் எப்படி 2 கட்டிக்கிட்டு சமாளிக்கிறாங்கன்னு தெரியலியே...’ என்று மற்ற ஆண்களை புலம்ப வைக்கிறார்கள் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஆண்கள். ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் உள்ளது தேரசர் கிராமம்.  இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இது அமைந்துள்ளது. இந்த குக்கிராமத்தில் 500 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு வசிக்கும் எல்லா ஆண்களும் கன்னி ராசிக்காரர்கள் போல் தெரிகிறது. எல்லாருமே இரண்டு மனைவிகாரர்கள். கட்டாயம் இரண்டு திருமணம் என்ற வழக்கத்தை பரம்பரை பரம்பரையாக கடைபிடித்து வருகின்றனர் இக்கிராம ஆண்கள்.

இந்த வழக்கத்தை தங்களின் மூதாதையர் காலம் தொட்டு தொடர்ந்து வருவதாக இக்கிராம ஆண்கள் கூறுகின்றனர். இது, மத ரீதியாக செய்யப்படும் திருமணமும் இல்லை. மதங்களை கடந்த தங்கள் கிராமக் கலாச்சாரம் என்கின்றனர் அவர்கள். தேரசர் கிராமத்தில் திருமணம் செய்ய விரும்பும் ஆண்கள் அனைவரும் இரண்டாவது திருமணத்தை செய்ய வேண்டும் என்பது அந்த ஊரின் எழுதப்படாத சட்டமாக உள்ளது. இக்கிராமத்தில் 2 திருமணங்கள் செய்வது இயல்பான ஒன்று என்பதால் அங்கு முதல் மனைவிக்கும், 2வது மனைவிக்கும் சக்களத்தி சண்டைகள், போட்டி பொறாமைகள் என எதுவும் இருக்காது. மேலும், எல்லாவற்றிலும் பரஸ்பர அட்ஜெஸ்ட்மென்ட்தான்.

பெண்கள் குடிநீருக்காக தினமும் 5 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும். ஒரு மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, கர்ப்பமாகி விட்டாலோ அவருக்கு பதில் மற்றொரு மனைவி வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வார். ஆண்கள் 2 திருமணம் செய்து கொள்ளும் இந்த வினோத வழக்கத்திற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

Related Stories: