உரிய விலை இல்லாமல் வீணாகும் தக்காளி : கடமலை-மயிலை விவசாயிகள் கவலை

வருசநாடு: தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், கடமலை மயிலை ஒன்றியத்தில் விவசாயிகள் தக்காளிகளை கீழே கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், கவலை அடைந்துள்ளனர்.கடமலை மயிலை ஒன்றியத்தில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சாகுபடி செய்த தக்காளியை தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இங்கு விளையும் தக்காளிகளை தேனி, ஆண்டிபட்டி, மதுரை, திண்டுக்கல் ஆகிய நகரங்களுக்கு தினசரி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் சிலர், தக்காளிகளை பறித்து டிரேக்களில் அடுக்கி வைத்து சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் பறிக்கும் தக்காளிகளை தோட்டம் ஓரமாக குவித்து வைத்து வருகின்றனர்.

இதனால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.இது சம்பந்தமாக விவசாயி கருத்தபாண்டி கூறுகையில், ‘கடமலை மயிலை ஒன்றியத்தில் தக்காளி அறுவடை நடந்து வருகிறது. ஆனால், உரிய விலை கிடைக்கவில்லை. சிலர் தக்காளிகளை பறித்து சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் கீழே கொட்டி வருகின்றனர். எனவே, தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய நிர்வாணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: