கொரோனா பரிசோதனை பற்றி அலட்சியமாக பேசிய தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி டீன், விருதுநகர் அரசு மருத்துவனைக்கு மாற்றம்: சுகாதாரத்துறை அதிரடி

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் திருவாசகமணி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டீன் திருவாசகமணியை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றி சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரிசோதனை பற்றி அலட்சியமாக பேசிய டீனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சமூக வைலைதளங்களில் வைரலானதை அடுத்து தூத்துக்குடி கல்லூரி டீன் திருவாசகமணி அதிரடி மாற்றம் செய்யப்பட்டார். கொரோனா காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி டீன் மாற்றப்படுவது இது 4-வது முறை ஆகும். கொரோனா காலத்தில் ஏற்கனவே சென்னை ஸ்டான்லி, கோவை, திருச்சி மருத்துவக் கல்லூரி டீன்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தூத்துக்குடி மருத்துவமனையில் கொரோனாவால் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இடவசதி இல்லாததால் மருத்துவர்கள் தங்கும் விடுதியை கொரோனா வார்டாக மாற்ற முயற்சி நடைபெற்று வந்தது. இது தொடர்பாக பயிற்சி மருத்துவர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் இடையே சர்ச்சை நிகழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2014-ம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மருத்துவர்கள் கடந்த ஏப்ரல் 30 அன்று தங்கள் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். பயிற்சியை முடித்த மருத்துவர்களுக்கு அந்த சான்றிதழை கொடுப்பதில் மருத்துவதனை நிர்வாகம் காலதாமதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பயிற்சி மருத்துவர்களை கட்டாயமாக விடுதியைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்கள். இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவர்களை காவல்துறை மூலம் நான் உங்களை வெளியேற்றுவேன் என கூறுவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.  இது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல்வராக இருந்த திருவாசகமணி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும்,  விருதுநகர் அரசு மருத்துவமனை முதல்வர் தூத்துக்குடிக்கும் இடமாற்றம் செய்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: