உரிய விலை கிடைக்காததால் தோட்டங்களில் தக்காளி தேக்கம்: விவசாயிகள் கவலை

வருசநாடு: உரிய விலை கிடைக்காததால், கடமலை மயிலை ஒன்றியத்தில் அறுவடை செய்த தக்காளிகளை விவசாயிகள் தோட்டங்களில் தேக்கி வைத்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியத்தில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தற்போது தக்காளி விவசாய சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இப்பகுதிகளில் விளைந்த தக்காளிகளை தேனி, ஆண்டிபட்டி, மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு  தினமும் ஏற்றுமதி செய்து வந்தனர்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் அறுவடை செய்த தக்காளிகளை சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பாமல், அவற்றை தோட்டங்களில் தேக்கி வைத்துள்ளனர். இதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். தக்காளி விலை சரிவால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குரியாகி உள்ளதால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: