திருவில்லி. மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, சிறுத்தை எண்ணிக்கை அதிகரிப்பு: கணக்கெடுப்பில் தகவல்

திருவில்லிபுத்தூர்:  திருவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் நடந்த கணக்கெடுப்பில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிப்புத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, மான் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் வனவிலங்குகள் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கணக்கெடுப்பு கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்றது.

வனத்துறை அதிகாரி கூறுகையில், ‘‘கடந்த ஆண்டை விட மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் வனவிலங்குகள் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது. வேட்டையாடுதலை கட்டுப்படுத்தியதாலும், வனப்பகுதியில் அடிக்கடி ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சோதனை செய்ததன் காரணமாக வனவிலங்கு வேட்டைகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’’ என்றார்.

Related Stories: