சம்பள கட், பணி நீக்கம் இல்லை… செல்சியா அறிவிப்பு

லண்டன்: கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும்  ‘வீரர்கள், பணியாளர்களுக்கான ஊதியத்தை  பிடித்தம் ஏதும் செய்யாமல் முழுமையாக வழங்குவோம்’ என செல்சியா கால்பந்து கிளப் உறுதியாக தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும் விளையாட்டுத்துறை முடங்கிக் கிடக்கும் நிலையில், விளையாட்டு கிளப்கள் பொருளாதார இழப்பை சமாளிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. சில கால்பந்து கிளப்கள்  வெளிப்படையாக வீரர்களுக்கான ஊதியத்தை குறைப்பதற்கான திட்டமிடலில் இருப்பதாக அறிவித்துள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த அர்செனல், வீரர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கான ஊதியத்தில் 12.5 சதவீதத்தை குறைக்க உள்ளது.  

மேலும் சில கிளப்கள் போட்டியில் பங்கேற்காத வீரர்களுக்கான ஊதியத்தை 10 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்போவதாக சொல்லியுள்ளன. ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதை தள்ளி வைத்துள்ள கிளப்களும் உள்ளன. ஆனால் செல்சியா கிளப் மட்டும் ஏற்கனவே  திட்டமிட்டிருந்தபடி 10 சதவீத  சம்பள கட் ஏதும் செய்யாமல் முழுமையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதே சமயம்  தங்கள் ஊழியர்களை முடிந்தவரை தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகளுக்கு உதவும்படியும் செல்சியா கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories: