கொரோனா பரிசோதனையில் வெளிப்படை தன்மை தேவை: பிரியங்கா டிவீட்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை செய்வதில் வெளிப்படை தன்மை தேவை என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா என அரசு சார்பில் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா தனது டிவிட்டர் பதிவில், ‘‘உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை குறித்து பெரும்பாலான மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை என்பது மிகவும் அவசியமாகும். ஒட்டு மொத்த சமூகம் மற்றும் அரசு ஒன்றாக இணைந்து கொரோனா நோய் பரவுவதை கட்டுப்படுத்த பணியாற்ற வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.  மீண்டும் பரிசோதனை தொடங்கப்பட்டு மிகப்பெரிய அளவில் நடத்தப்படவேண்டும். கொரோனா குறித்த தரவுகளையும் உண்மையையும்  மறைப்பது என்பது ஆபத்தானது.” எனக் கூறியுள்ளார்.

Related Stories: