இங்கிலாந்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய 106 வயது மூதாட்டி; மருத்துவ ஊழியர்கள் கைத்தட்டி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனாவில் இருந்து 106 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 1,37,666 பேர் உயிரிழந்துள்ளனர். 20,72,228 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,18,600 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களில் 95% பேர் மிதமான அளவில் பாதிக்கப்பட்டவர்களே. 5% பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மிதமான பாதிப்புள்ளவர்கள் பெரும்பாலும் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். ஆனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உயிர்பிழைப்பது அரிதாகிறது. இந்த வருத்தத்திற்கு நம்பிக்கையூட்டும் வகையில் இங்கிலாந்தில் கொரோனாவிலிருந்து 106 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இங்கிலாந்த்தின் பர்மிங்ஹாமில் உள்ள மருத்துவமனையில் மூன்று வாரங்களாக கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்தார். பிரிட்டனில் கொரோனா தாக்குதலில் இருந்து குணமடைந்த மூத்த பெண்மணி கோனி டிச்சன் ஆவார். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு புறப்பட்ட அவரை மருத்துவமனை ஊழியர்கள் கைத்தட்டி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

Related Stories: