ஊரடங்கு ஒரு தற்காலிக தீர்வு: இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை...ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: கொரோனாவை தடுக்க ஊரடங்கு மட்டுமே தீர்வாக அமையாது என டெல்லியில் காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி பேட்டியளித்தார். பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் பரிசோதனைகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும், கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகளவு மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். ஊரடங்கால் கொரோனா பரவுவது குறையலாமே தவிர நிரந்திரமாக ஒழித்துவிட முடியாது என தெரிவித்தார். பெரிய நெருக்கடியை மத்திய அரசு தள்ளிப்போட்டு உள்ளது என கூறினார். கேரளா மாநிலம் கொரோனா தடுப்பை வெற்றிகரமாக கையாண்டு இருக்கிறது என கூறினார். சோதனைகளை அதிகரிக்க மாநிலங்களுக்கு அதிக வசதி ஏற்படுத்த வேண்டும் என கூறினார். மாநில, மாவட்ட அளிவில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என கூறினார்.

மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை உடனடியாக தர வேண்டும் என தெரிவித்தார். சோதனையை தீவிரப்படுத்துவது தான் கொரோனா கொரோனா தடுப்புக்கு தீர்வாகும் எனவும் கூறினார். கொரோனா தொற்று பரிசோதனையை நாடு முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும் என கூறினார். சிறு குறு மற்றும் நடத்தர தொழில்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். தமது தொதியான வயநாட்டிலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என கூறினார். பரவலான கொரோனா சோதனையை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். ஏழைகளுக்கு உணவு கிடைப்பதை அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். இடுத்து வரும் மாதங்களில் நாடு பெரும் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் கூறினார். வேலையின்மை பிரச்சனையை சமாளிக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என கூறினார்.

Related Stories: