கொரோனா ஊரடங்கு எதிரொலி: வீட்டுக்குள் பாடும் முன்னணி பாடகர்கள்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அதுபோல், திரைக்கலைஞர்களும் வீட்டுக்குள்ளேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பொழுதுபோக்குகின்றனர். பல நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். பெரும்பாலான நடிகைகள் வீட்டை சுத்தப்படுத்தி அலங்காரம் செய்வது, தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது, காய்கறிகள் பறிப்பது, ஜிம்முக்கு செல்ல முடியாததால் வீட்டுக்குள்ளேயே யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து வீடியோ வெளியிடுவது என, எப்போதும் தங்களை பிசியாக வைத்திருக்கின்றனர்.

அந்த வரிசையில் முன்னணி பாடகர், பாடகிகள் இணைந்து ‘சங்கீத சேது என்ற இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர். இதில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர், கே.ஜே.யேசுதாஸ், ஹரிஹரன், ஆஷா போஸ்லே, சங்கர் மகாதேவன், உதித் நாராயணன், பங்கஜ் உதாஸ், அல்கா யாக்னிக், கைலாஷ் கேர், ஷான் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி பாடகர்கள் வீட்டில் இருந்தபடியே பாடுகின்றனர். இந்நிகழ்ச்சியை இந்திய பாடகர்கள் உரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைத்துள்ளது.

Related Stories: