‘வாழ்நாளில் காணாத பொருளாதார பின்னடைவு’

ஜெனிவா:  கொரோனா பாதிப்பால் நிறுவனங்கள், தொழில்துறைகள் முடங்கி கிடக்கின்றன. இதனால், உலக அளவில் வர்த்தகம் 13 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை பாதிக்கப்படும் என உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேட்டியளித்த இந்த அமைப்பு தலைவர் ராபர்ட் அசிவேடோ, ‘‘நமது வாழ்நாளில் இதுவரை சந்தித்திராத அளவுக்கு மோசமான பொருளாதார பின்னடைவு ஏற்படும். எனவே, இந்த நிலையில் இருந்து மீண்டு நீடித்த நிலையான வளர்ச்சி அடைய அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்’’ என கூறியுள்ளார்.

Related Stories: