காலியாக உள்ள 18 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: மாநிலங்களவையில் காலியாகும் 55 இடங்களுக்கு மார்ச் 26ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. இதில், 37 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் 18 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் தேர்தலை தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. கொரோனா  சூழ்நிலைக்கு ஏற்ப, தேர்தலுக்கான மறுதேதி அறிவிக்கப்படும் என அது தெரிவித்து இருந்தது.  இந்நிலையில், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் நலன் கருதி இத்தேர்தலை மேலும் ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324ன் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 153ன் படி தேர்தல் தேதியை நீட்டித்துள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Stories: