கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட கர்நாடக எல்லையை திறக்க கோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் காசர்கோடு மாவட்டம் கர்நாடக எல்லைையை ஒட்டி உள்ளது.  இங்கிருந்தும், அண்டை மாவட்டங்களான கண்ணூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு சிகிச்சைக்காக  சென்றுவருகின்றனர்.இந்த நிலையில் காசர்கோடு மாவட்டத்தில் கொரோனா  பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, கர்நாடக அரசு தனது  எல்லையை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மூடிவிட்டது. ஆம்புலன்ஸ்கள் கூட அனுமதிக்கப்படவில்லை.  இதனால் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் பலியாயினர். இதையடுத்து எல்லையை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட ேகாரி கேரள  அரசு மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை  விசாரித்த நீதிமன்றம் நேற்று முன்தினம் கேரள, கர்நாடக மாநில தலைமை செயலாளர்கள்  ஆலோசித்து முடிவு அறிவிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால்  பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.  இதையடுத்து தேசிய  நெடுஞ்சாலையை உடனடியாக திறக்க மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேரள  உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் நேற்றுவரை கர்நாடக எல்லை திறக்கப்படவில்லை. எல்லையில் கர்நாடக ேபாலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரள ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக எல்லையை திறக்கக் கோரி  காசர்கோடு எம்பி ராஜ்மோகன் உண்ணித்தான் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: