விம்பிள்டன் ரத்து

லண்டன்: புல்தரை மைதானத்தில் நடைபெறும் பிரபல கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் வரும் ஜூன் 29ம் தேதி தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த இத்தொடர் ரத்து செய்யப்படுவதாக ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் தலைவர் இயான் ஹெவிட் நேற்று அறிவித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் முறையாக விம்பிள்டன் தொடர் ரத்தாவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே யூரோ 2020, டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டித் தொடர்கள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மே மாதம் நடப்பதாக இருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் செப். 20ல் தொடங்கி அக்.4 வரை நடைபெற உள்ளது.

Advertising
Advertising

Related Stories: