கொரோனா கண்டறிய ரேபிட் பரிசோதனை: 30 நிமிடங்களில் முடிவு தெரியும்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதுவரை 6,600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் வருவதற்கு பல நாட்கள் ஆகின்றன. தற்போது நோய் வேகமாக பரவி வருகிறது. சமூக பரவல் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால், பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிந்து கொள்ள ரேபிட் பரிசோதனை நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் கேரள அரசு அனுமதி கோரியிருந்தது.இந்த நிலையில் ரேபிட் பரிசோதனை நடத்த  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் ரேபிட் பரிசோதனை தொடங்க வாய்ப்புள்ளதாக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்தார். இதன் மூலம் ஒருவருக்கு பரிசோதனை நடத்தினால் 10 முதல் 30 நிமிடங்களுக்குள் முடிவு தெரிந்துவிடும்.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்கள், நோய் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளவர்கள், நோயாளிகளுடன் பழகிய மருத்துவத்துறையினர், மூச்சுத்திணறல் இருப்பவர்கள் மற்றும் மூச்சுத்திணறல் நோயில் இருந்து குணமானவர்கள் ஆகியோருக்கு இந்த பரிசோதனை நடத்தப்படும்.

Related Stories: