நாட்டிலேயே முதல் முறையாக கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணம் அறிமுகம் : உபகரணத்தை பயன்படுத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல்

புனே : நாட்டிலேயே முதல் முறையாக கொரோனா பாதிப்பை கண்டறியும் கிட்டை புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி செல்யூஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த புதிய உபகரணத்தை பயன்படுத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உபகரணத்தின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் என அந்த தனியார் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கருவியின் விலை ரூ.80 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா கண்டுப்பிடித்த இந்த புதிய கருவி இன்று முதல் பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகை ஆட்டிப்படைக்கும் இந்த கொரோனா வைரஸ் 17,000 உயிர்களை காவு வாங்கி உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தையும் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இந்தியாவிலும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி 10 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. இத்தகைய கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணம், பொதுமக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: