தாடி வைத்திருந்ததை கிண்டல் செய்ததால் பரோட்டா மாஸ்டருக்கு கத்திரிக்கோல் குத்து: நண்பருக்கு வலை

சென்னை: முகச்சவரம் செய்ய கோரி கேலி செய்ததால் பரோட்டா மாஸ்டரை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிய நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை கரம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் மாதவன் (45). இவர், மெரினா கடற்கரையில் உள்ள டிபன் கடையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இங்கு தனசரி சாப்பிட வரும் தேனியை சேர்ந்த சிவா என்பவருடன் மாதவனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு சிவாவும், மாதவனும் சந்தித்து பேசினர். அப்போது, சிவா முகத்தில் தாடி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

இதை மாதவன் கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவா மாதவனுடன் தகாரில் ஈடுபட்டு, கையில் இருந்த கத்திரிக்கோலால் அவரை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த மாதவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவலறிந்த அண்ணாசதுக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாதவனை மீட்டு சிகிச்ைசக்காக பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தப்பி ஓடிய சிவாவை தேடி வருகின்றனர்.

Related Stories: