வருமுன் காப்பதை சிறந்தது; முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதன் மூலம் கொரோனாவை எதிர்ப்போம்....விராட் கோலி டுவிட்

மும்பை: திடமாக இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதன் மூலம் கொரோனா வைரஸை எதிர்ப்போம் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா  வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்துள்ளது.  இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் உட்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது மேலும் பொதுமக்கள் மத்தியில் பீதியை அதிகரித்துள்ளது.  இதனால் பல மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உபி, பீகார், ஒடிசா, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர், மால்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பை பேரிடராக கருதி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வைரஸ்  தாக்குதல் மூலம் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் பொதுமக்கள் இருக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளார். திடமாக இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதன் மூலம் கொரோனா வைரஸை எதிர்ப்போம். வருமுன் காப்பதை சிறந்தது என குறிப்பிட்டுள்ள விராட்போலி, அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று  கேட்டுக்கொண்டுள்ளார். தயது செய்து அனைவரும் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி பதிவிட்டுள்ளார்.

Related Stories: