திருமலை: ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தெலுங்கு தேசம் எம்எல்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்த சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்சி டோக்கா மாணிக்க வரப்பிரசாத், முன்னாள் எம்எல்ஏ ரகுமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதல்வர் ஜெகன் மோகனை தாடேபல்லியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் நேற்று நேரில் சந்தித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
