ஜிஎஸ்டி போர்ட்டலில் உள்ள குறையை சரிசெய்யும் திட்டத்தை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்க: இன்போசிஸ் நிறுவனத்திற்கு மத்திய நிதியமைச்சகம் கடிதம்

டெல்லி: ஜிஎஸ்டி போர்ட்டலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வது தொடர்பான திட்டத்தை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய இன்போசிஸ் நிறுவனத்தை மத்திய  நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஜிஎஸ்டி நெட்வோர்கின் மென்பொருள் கட்டமைப்புகளை முன்னணி மென்பொருள் நிறுவனமான கவனித்து வருகிறது. அவப்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தாலும் வரி தாக்கல் செய்யும்போது இன்னும் சில தொழில்நுட்ப கொளாறுகளை வரி செலுத்துவோர் எதிர்  கொண்டு வருகின்றனர். இந்த சிக்கலை களைய என வரி செலுத்துவோர்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றனர். எனவே வரும் மார்ச் 14-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலின் முன்பு இன்போசிஸ் நிறுவனர் நந்தன் நிலகேனி நேரில் ஆஜராகி இது தொடர்பான விளக்கத்தை அளிக்குமாறு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் இன்போசிஸ் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் 2018-ம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி போர்ட்டலில் உள்ள குறைபாடுகள்  களைய படவில்லை என்றும் இதனால் முறையாக ஜிஎஸ்டி செலுத்தும் வாடிக்கையாளர்கள் விரக்தி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் 15  நாட்களுக்குள் ஜிஎஸ்டி போர்ட்டலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யுமாறு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Related Stories: