கோவை புறநகர் பகுதிகளில் மசாஜ் சென்டர்கள் பெயரில் விபசார விடுதிகள் சர்வ சாதாரணமாக இயங்கி வருகின்றன. குறிப்பாக, ஜி.என்.மில்ஸ், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், இடையர்பாளையம் டிவிஎஸ் நகர், வடவள்ளி, தொண்டாமுத்தூர், வாளையார், க.க.சாவடி பகுதிகளில் பல்வேறு பெயர்களில் இந்த மசாஜ் சென்டர்கள் இயங்குகின்றன. பாடி டூ பாடி மசாஜ் ரூ.4,500, டாப்லெஸ் ரூ.1,500, ஹேப்பி என்ட் ரூ.1000 என பட்டியல் போட்டு, சமூக வலைதளங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் இழுக்கப்பட்டு, இச்சட்ட விரோத செயல் ஜரூராக நடக்கிறது.