டிஜிபி வாட்ஸ்அப் போட்டோவுடன் போலி டிபி உருவாக்கி தொழிலதிபர் மகளிடம் ₹50 ஆயிரம் கேட்டு மிரட்டல்

*சைபர் கிரைம் போலீசார் விசாரணை

திருமலை : டிஜிபி வாட்ஸ்அப் போட்டோவுடன் போலி டிபி உருவாக்கி தொழிலதிபர் மகளிடம் ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலத்தில் தொழிலதிபர் மகளுக்கு அம்மாநில டிஜிபி ரவி குப்தாவின் புகைப்பட டிபியுடன் கூடிய வாட்ஸ் அப் கால் அழைப்பு நேற்று வந்தது. அந்த அழைப்பை எடுத்த பின் போதைப்பொருள் வழக்கில் கைது செய்து விடுவோம் என மிரட்டினர். அதற்கு நான் ஒன்றும் செய்யவில்லை என்றார். ஆனால் ஆதாரம் இருப்பதாக கூறி மிரட்டினர்.

தெலுங்கானா டிஜிபி ரவி குப்தாவின் வாட்ஸ்அப் டிபி உண்மையானது என நம்பி அந்த இளம்பெண் பீதியடைந்தார். இதனால் பேச்சில் தடுமாற்றம் அடைவதை உணர்ந்த சைபர் குற்றவாளிகள் இந்த வழக்கில் இருந்து விடுபட உடனடியாக ரூ.50 ஆயிரத்தை அனுப்ப வேண்டும் என்றனர். இதனால் சந்தேகமடைந்த இளம்பெண் உடனே போன் அழைப்பை துண்டித்துவிட்டு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் போனுக்கு வந்த வாட்ஸ்அப் அழைப்பை ஆய்வு செய்தனர். அதில் +92 குறியீட்டுடன் வாட்ஸ்அப் அழைப்பு வந்ததாக அவர் கூறினார். இந்த +92 குறியீட்டை ஆய்வு செய்த சைபர் க்ரைம் போலீசார் இது பாகிஸ்தானின் குறியீடு என கண்டறிந்தனர். இது போன்ற அழைப்புகளைத் எடுக்க வேண்டாம், அவர்களுடன் வீடியோ கால்களில் பேசுவது போன்றவற்றை செய்யாமல் கட் செய்ய வேண்டும். அத்தகைய எண்களைத் எடுக்காமல் புறகணிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.

The post டிஜிபி வாட்ஸ்அப் போட்டோவுடன் போலி டிபி உருவாக்கி தொழிலதிபர் மகளிடம் ₹50 ஆயிரம் கேட்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: