இந்தோனேஷியாவின் ஸ்பைடர்மேன்

நன்றி குங்குமம் முத்தாரம்

உலகிலேயே அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நான்காவது நாடு இந்தோனேஷியா. அங்கே வருடத்துக்கு 3 மில்லியன் டன்னுக்கும் அதிகமான குப்பைகள் உருவாகின்றன. இதில் பாதியளவு குப்பைகள் கடலில் கலந்துவிடுகின்றன. இதுபோக கடற்கரையிலும் தெருக்களிலும் கூட அதிகமான குப்பைகள் வீசப்படுகின்றன. இந்நிலையில் ரூடி என்பவரின் முயற்சி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு கபேயில் வேலை செய்து வருகிறார் ரூடி. எங்கு குப்பை கிடந்தாலும் அதை எடுத்து குப்பைத்தொட்டியில் போடுவார். மறுசுழற்சி செய்ய தந்துவிடுவார். ஆனால், அவரது இந்த தன்னலமற்ற செயல் எந்தவிதமான விழிப்புணர்வையும் மக்கள்மத்தியில் ஏற்படுத்தவில்லை.  அவருக்கு மனதில் ஒரு யோசனை தோன்றியது.

ஆம்; ஸ்பைடர் மேனைப் போல உடையணிந்து கடற்கரைகளில் உள்ள குப்பை களைப் பொறுக்க ஆரம்பித்தார். எல்லோர் கவனமும் ரூடி மீது திரும்பியது. தொலைக்காட்சிகள் அவரைப் பேட்டி எடுத்தன. குப்பைகளைப் பற்றிய விழிப் புணர்வும் இந்தோனேஷியா மக்களிடம் ஏற்படத் தொடங்கி யுள்ளது. இப்போது ரூடியை ‘இந்தோனேஷியன் ஸ்பைடர் மேன்’ என்று அழைக்கின்றனர்.

Related Stories: