பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

கரூர்: கரூர் சரஸ்வதி வித்யாலாயா நர்சரி மற்றும பிரைமரி பள்ளி மாணவர்கள் சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் அனிதா தலைமை வகித்தார். மாணவி தீபதர்ஷினி கலந்து கொண்டு அறிவியல் தினம் குறித்து பேசினார். மாணவி மதுமதி அறிவியலாளர்களையும், அவர்கள் கண்டுபிடிப்புகள் குறித்தும் பேசினார். பள்ளியில் 800 மாணவர்கள் இணைந்து ஏவுகணை நாயகன் அப்துல்கலாமின் முகமூடி அணிந்து நேஷனல் சயின்ஸ் டே என்ற எழுத்துக்களால் வடிவமைத்து நின்றது அனைவரையும் கவர்ந்தது.

அணுக்களால் ஆன இந்த பிரபஞ்சம் கோள்களாக, விண்மீன்களாக, விரிசூழல் ஏணிபோல் வளர்ச்சி அடைய கோடி ஆண்டுகள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட அறிவியல் யுகத்தில் ஆறறிவு மனிதனின் ஆக்கமும், செயல்பாடும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது என்பதை குறிக்கும் வகையில் தேசிய அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில், பள்ளி தாளாளர் பெரியசாமி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பத்மநாபன், உடற்கல்வி இயக்குநர் கதிர்வேல் உட்பட அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: