கூட்டணி அமைக்காவிட்டால் கமல் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து

அவனியாபுரம்: தேர்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லையென்றால், கமல்ஹாசன் வெளிநாட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலின்போது திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி இல்லையென கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைக்காவிட்டால், அவர் வெளிநாட்டுக்குத்தான் செல்ல வேண்டும்.  ரஜினியுடன் கூட்டணி என கமல்ஹாசன்தான் தெரிவித்துள்ளார். ஆனால், ரஜினி கூட்டணி குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்

Related Stories: