கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடக்கம்

நாகர்கோவில் : கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஈஸ்டர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் வகையில் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வருகிற ஏப்ரல் 12ம் தேதி வருகிறது. இந்த பண்டிகைக்கு முன் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். அதன்படி நாளை (26ம் தேதி) கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குகிறது. இதையொட்டி தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

Related Stories: