கால் ஃபார்வார்டிங் மோசடி: காவல்துறை எச்சரிக்கை

சென்னை: டெலிவரி முகவர்களாக நடிக்கும் USSD அடிப்படையிலான கால் ஃபார்வார்டிங் மோசடி குறித்து போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கூரியர், பார்சல் டெலிவரி முகவர்கள் போல் நடித்து வங்கிக் கணக்குகளில் மோசடியாக அணுக முயல்வது கண்டுபிடிக்கப்பட்டது. பார்சல் வந்ததை உறுதிப்படுத்த USSD குறியீட்டை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி டயல் செய்யும்படி கூறுவார்கள். குறியீடு பொதுவாக 21 என்று தொடங்கிய பின்னர், குற்றவாளிகளின் செல்போன் எண்ணை கொண்டதாக இருக்கும். செல்போன் எண்ணை டயல் செய்தவுடன் பாதிக்கப்பட்டவரின் செல்போனில் கால் ஃபார்வார்டிங் நிலைக்கு செல்லும் ஏன் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: