தேசிய அறிவியல் தினவிழா

புதுச்சேரி: புதுச்சேரி பீனிக்ஸ் அறிவியல் கழகம் சார்பில் தேசிய அறிவியல் தினவிழா ஈஸ்வரன் கோயில் வீதியில் நடந்தது. கழக செயலாளர் அரவிந்தராஜா இவ்வாண்டின் தேசிய அறிவியல் தினத்தின் மைய தலைப்பான அறிவியலில் பெண்கள் எனும் தலைப்பில் சுவரொட்டி கண்காட்சியை வைத்து, இந்தியாவில் தலைசிறந்து விளங்கும் பெண் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை, கல்வி ஆராய்ச்சி, சாதனை ஆகியவற்றை மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் கதை கூறுதல் முறையில் விளக்கினார்.

Advertising
Advertising

 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நிர்வாக உறுப்பினர் கார்த்திக், சிறுவர் பக்கத்தின் தலைவர் நாகேஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெண் அறிவியல் அறிஞர்களின் படங்கள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Stories: