கே.வி.குப்பம் அருகே போக்குவரத்து பாதிப்பு: சாலை விரிவாக்கப்பணிக்காக மரங்கள் வெட்டி அகற்றம்

கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவில் காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களாகவே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்கு இடையூறாக உள்ள மரங்கள் மற்றும் சில மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றி வருகின்றனர். கே.வி.குப்பம் அருகே உள்ள வேப்பங்கனேரி கிராம தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் இதுபோன்று மரங்களை வெட்டும் பணி நடந்தது. அப்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகனங்கள் காட்பாடியிலிருந்து-குடியாத்தம் செல்லும் சாலையில் வரிசையாக நின்றது. மேலும் உரிய நேரத்தில் ெசல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதில் அரசு, தனியார் பஸ்கள், லாரிகள், வேன், பைக்குகள் உட்டபட அனைத்து வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே உரிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்தனர்.

Related Stories: