கோவையில் பிச்சை எடுத்து சாப்பிடும் சுவீடன் தொழிலதிபர்

கோவை: கோவையில் சுவீடனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பிச்சை எடுத்து சாப்பிட்டு வருகிறார். சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் கிம். (40). தொழிலதிபர். சுவீடனில் இவருக்கு தோட்டங்கள், பங்களா, கார்கள் உள்ளன. ராஜ வாழக்கை பிடிக்காமல் சந்நியாசியாக வாழ ஆசைப்பட்டு அங்கிருந்து கிளம்பி இந்தியா வந்த அவர் கோவையில் ஒரு தியான மையத்தில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்து கோவையில் ரயில்நிலையம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் பிச்சை எடுத்து சாப்பிட்டு வருகிறார். இவர் பொது இடங்களில் தங்குவார்.

Advertising
Advertising

இதுகுறித்து கிம் கூறுகையில், எனக்கு ராஜ வாழ்க்கை பிடிக்கவில்லை. சந்நியாசியாக வாழ நினைத்து குடும்பத்தை பிரிந்து கோவை வந்து ஒரு தியான மையத்தில் சேர்ந்தேன். அங்கிருந்து வெளியேறி கோவையில் ரயில்நிலையம், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொது இடங்களில் பிச்சை எடுத்து அதில் வரும் பணம் மூலம் சாப்பிட்டு வருகிறேன். எனக்காக எதையும் சேமித்து வைப்பது கிடையாது. இது தான் நிரந்தரம் என்பதை உணர்ந்ததால் கோவையில் சந்நியாசியாக மகிழ்ச்சியாக உள்ளேன். குடும்பம் பற்றி கவலை எனக்கு இல்லை, என்றார்.

Related Stories: