நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு உரப்பரிந்துரை செயல்விளக்கம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மண்வளத்திற்கும், மகசூல் இலக்கிற்கும் ஏற்ற உரப்பரிந்துரை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நெல்லில் மண்வளத்திற்கும், மகசூல் இலக்கிற்கும் ஏற்ற உரப்பரிந்துரைக்கான செயல்விளக்கம் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து இயற்கை வள மேலாண்மை இயக்குனர் சாந்தி கலந்து கொண்டு ஆய்வு செய்து, பேசுகையில், நெல்லிற்கும் மண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

மேலும் இச்செயல் விளக்கத்தில் நெற்பயிரில் எக்டருக்கு 7 டன் மகசூல் எடுப்பதற்கான உரப்பரிந்துரை என கூறி முதலில் மண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பின்பு 7 டன் மகசூல் எடுப்பதற்கான சமன்பாட்டில் மண் பரிசோதனையின் தழைச்சத்து, மணிசத்து மற்றும் சாம்பல் சத்து ஆகிய அளவுகளை இட்டு, எவ்வளவு தொழு உரம் யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் நுண்ணூட்ட உரங்களை எப்பொழுது எவ்வளவு இட வேண்டும். என்பதை இந்த உரப்பரிந்துரையில் தெரிந்து கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சியில் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன்,வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மண்ணியியல்துறை உதவிபேராசிரியர் அனுராதா செய்திருந்தார். இதில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: