சாலை விபத்தில் துப்புரவு தொழிலாளி பலி வீட்டுப்பணியாளர்கள் திடீர் சாலை மறியல்

நொய்டா: சாலை விபத்தில் துப்புரவுத் தொழிலாளி இறந்ததையடுத்து, விபத்துக்கு காரணமான பகுதியில் பாதுகாப்பை அதிரிக்கக்கோரி உள்ளூரை சேர்ந்த வீட்டு பணியாளர்கள் பலர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். நொய்டாவில் கடந்த சனிக்கிழமையன்று இங்குள்ள சாலையில் சென்று கொண்டிருந்த துப்பரவு தொழிலாளி மோனு நாகர் என்பவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு தப்பிச்சென்றது. இதில் படுகாயங்களுடன் டெல்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மோனு நாகர் உயிரிழந்தார்.

இதன்எதிரொலியாக நேற்று நொய்டா செக்டார் 100 சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள குடியிருப்பு முன்பாக உள்ள சாலையில், அந்த பகுதியை சேர்ந்த  வீட்டு பணியாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, இங்குள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். ரெட் லைட் அருகே சாலையின் இருபுறமும் ஸ்பீட் பிரேக்கர்கள், சி.சி.டி.வி கேமராக்கள் அமைப்பதோடு,  ஜெர்சி அணிந்த போக்குவரத்து கட்டுப்பாடு ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக துப்பரவு பணியாளர்களும் களத்தில் குதித்து ஆதரவுதெரிவித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தபின் போக்குவரத்து சீரானது.

Related Stories: