திருட்டு பைக்கில் செல்போன் பறிப்பு: 2 பேருக்கு வலை

சென்னை: திருட்டு பைக்கில் செல்போனை பறித்த 2 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்தவர் விஜய் (32). இவர் நேற்று முன்தினம் இரவு 11.15 மணிக்கு சூளை ரவுண்டானா அருகில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் விஜய் பைக்கை மோதி அவர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். ஆனால் விஜய் கொள்ளையர்களை விடாமல் பைக்கில் பின் தொடர்ந்து ஆர்எம் சாலையில் உள்ள மசூதி அருகே பொதுமக்கள் உதவியுடன் மடக்கினார்.

Advertising
Advertising

அப்போது செல்போனை பறித்த 2 வாலிபர்களும் பைக் மற்றும் இரண்டு செல்போன்களை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் சம்பவம் குறித்து விஜய் ெபரியமேடு போலீசாருக்கு தகவல் ெகாடுத்தார். அதன்படி விரைந்து வந்த போலீசார் 2 வழிப்பறி கொள்ளையர்கள் விட்டு சென்ற பைக்  மற்றும் செல்போன்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையர்கள் விட்டு சென்றது திருவொற்றியூர் பகுதியில் மாயமான பைக் எனவும், அமைந்தகரை பகுதியில் பறித்த செல்போன் என தெரியவந்தது. மற்றொரு செல்போன் புகார் அளித்த விஜய் என்பவருக்கு சொந்தமனது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெரியமேடு போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று தப்பி ஓடிய 2 வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: