படுக்கை அறையில் பயங்கரம்: மனைவி, க.காதலன் சரமாரி வெட்டிக் கொலை: அரிவாளுடன் தொழிலாளி சரண்

ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி அருகே இன்று அதிகாலை படுக்கை அறையில் உல்லாசமாக இருந்த மனைவியும், கள்ளக்காதலனும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அவர்களை வெட்டிய கணவர் அரிவாளுடன் போலீசில் சரண் அடைந்தார். தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே புங்கவர்நத்தம் கிராமம், அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம் (59). விவசாய கூலித் தொழிலாளி. இவரது முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து மாரியம்மாள் (45) என்ற பெண்ணை சண்முகம் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சண்முகத்திற்கு மூத்த மனைவி மூலம் 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். 2வது மனைவி மாரியம்மாள் மூலம் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் மாரியம்மாளுக்கு பிறந்த மகன் தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கடைசி மகன் சித்த மருத்துவப் படிப்பு முடித்து கோவையில் பணியாற்றி வருகிறார்.

Advertising
Advertising

சண்முகம் தினமும் அதிகாலையில் வயல் வேலைக்கு சென்றுவிட்டு மதியத்திற்கு மேல் தான் வீடு திரும்புவது வழக்கம். அவரது வீட்டுக்கு எதிரே அதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (28) என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை. தினமும் கட்டிட தொழிலாளர்களுடன் காலையில் 9 மணிக்கு ராமமூர்த்தி அங்கு வந்துவிடுவார். அப்போது எதிர் வீட்டில் தனிமையில் இருந்த மாரியம்மாளிடம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் சண்முகம் வயல் வேலைக்கு சென்றதும் இருவரும் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதற்காக அதிகாலை 5 மணிக்கே தான் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டுக்கு வரும் ராமமூர்த்தி, தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக ‘ஹோஸ் குழாய்’ மூலம் கட்டப்பட்ட பகுதிகளை தண்ணீரால் நனைப்பாராம்.

பின்னர் சண்முகம் வீட்டிலிருந்து வயல் வேலைக்கு சென்றதும் மாரியம்மாள் வீட்டுக்குள் சென்று அங்கு தனியறையில் இருவரும் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக்கி உள்ளனர். இது அரசல், புரசலாக சண்முகத்திற்கு தெரியவந்தது. இருந்தும் மனைவி மீதுள்ள நம்பிக்கையில் அதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று வயல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு இரவில் வீடு திரும்பிய சண்முகம் நன்றாக அசதியில் உள்அறையில் படுத்து தூங்கிவிட்டார். இன்று அதிகாலை 6 மணி அளவில் வழக்கம்போல் மாரியம்மாள் வீட்டுக்கு வந்த கள்ளக்காதலன் ராமமூர்த்தி, மாரியம்மாளை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதிகாலையில் கணவர் சண்முகம் எழுந்து வேலைக்கு சென்றுவிட்டார் என்று நினைத்து மாரியம்மாளும் அவருடன் தனது வீட்டின் முன் அறைக்கு சென்றார். அப்போது உள்அறையில் தூங்கிக் கொண்டிருந்த சண்முகத்திற்கு விழிப்பு ஏற்பட்டது.

வீட்டில் பேச்சுக் குரல் கேட்கவே, இந்த நேரத்தில் யார்? என்று எழுந்து பார்த்துள்ளார். அப்போது முன் அறையில் மாரியம்மாள் மற்றும் ராமமூர்த்தி 2 பேரும் கட்டிலில் உல்லாசமாக இருப்பதை பார்த்த சண்முகத்திற்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

உடனே வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் ராமமூர்த்தியின் தலை துண்டானது. மாரியம்மாளுக்கு கழுத்தில் பலத்த வெட்டு விழுந்தது. இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். இதையடுத்து அரிவாளில் ரத்தம் சொட்ட சொட்ட சண்முகம், பசுவந்தனை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்து நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாரியம்மாள், ராமமூர்த்தி ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சண்முகத்தை கைது செய்தனர்.

Related Stories: