விலையேற்றத்தை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி: காஸ் சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து திருச்சியில் மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் சாமானிய மக்கள் பயன்படுத்தி வரும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் தற்போது அதிரடியாக அதிகரித்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் விற்கப்பட்டு வருகிறது. 12 சிலிண்டருக்கு மேல் சந்தையில் வாங்க வேண்டும்.

ஆனால் மானிய சிலிண்டர் விலை எவ்வளவு என்பதை எண்ணெய் நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவிப்பதில்லை. வீட்டுக்கு பில் வரும் போதுதான் இதையறிந்து கொள்ள முடியும். தற்போது மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.149 வரை உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள இ.கம்யூ., அலுவலகத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில செயலாளர் மஞ்சுளா தலைமை வகித்தார். மாநில தலைவர் பத்மாவதி, பொருளாளர் ரேணுகா தாமஸ், துணைத்தலைவர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது, குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து மாலையில் அலுவலகத்தின் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் உள்பட எராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

வீட்டு உபயோகத்திற்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் விற்கப்பட்டு வருகிறது. 12 சிலிண்டருக்கு மேல் சந்தையில் வாங்க வேண்டும். ஆனால் மானிய சிலிண்டர் விலை எவ்வளவு என்பதை எண்ணெய் நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவிப்பதில்லை.

Related Stories: