ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 5 தீவிரவாதிகள் கைது: ஏரளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரத்து செய்யப்பட்டபின், அங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக உள்ளன. பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீட்டு சிறையிலும், சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய தள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. பின்னர் பதற்றம் தணிந்த பகுதிகளில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே பயங்கரவாதிகள் அவ்வப்போது அப்பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தனர்.

சில நேரங்களில் சாதாரண ஆயுதங்களை கொண்டும், சில நேரங்களில் பெரிய வகை ஆயுதங்களை கொண்டும் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் அடில் குல்சார் கனி என்ற ஒரு முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

மேலும் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஏரளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

Related Stories: