அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வருகிற 19ம் தேதி அறக்கட்டளை ஆலோசனை

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை உறுப்பினர்கள் வருகிற 19ம்தேதி ஆலோசனை நடத்தி உள்ளனர். நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் பேசிய பிரதமர் மோடி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 15 உறுப்பினர்கள் கொண்ட ‘ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த அறக்கட்டளையானது தன்னாட்சி அமைப்பாக செயல்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்நிலையில், அறக்கட்டளையின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளை உறுப்பினரான சுவாமி வசுதேவானந்த் சரஸ்வதி அளித்த பேட்டியில், ‘‘வரும் 19ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். அறக்கட்டளையில் ஸ்ரீ ராம் மந்தீர் நியாஸ் தலைவர் மகந்த் நிரித்யா கோபால் தாசை சேர்ப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்” என்றார்.  

Related Stories: