1/2 கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு டீ 1 கிலோவுக்கு ஸ்நாக்ஸ் இலவசம் : குஜராத் காபி கடையில் அதிரடி

வதோதரா: குஜராத் மாநிலத்தில் உள்ள காபி கடை ஒன்றில் பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால், அரை கிலோவுக்கு  டீயும், ஒரு கிலோவுக்கு ஸ்நாக்ஸ்-ம் இலவசமாக வழங்கப்படுகிறது. குஜராத்தில் தகோத்தில் தாலுகா அலுவலகத்துக்கு முன்பு, `பிளாஸ்டிக் கபே’ அமைந்துள்ளது. பழங்குடியினர் நிறைந்த இந்த மாவட்டத்தை, பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றும் முயற்சியாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நவீன காபி கடை ஒன்று தொடங்கப்பட்டது. இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் அரை கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு டீயும், ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு சிற்றுண்டியும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த சிற்றுண்டிகள் குஜராத் மாநில அரசின் பெண்கள் சுய உதவிக் குழுவினரின் சகி மண்டல் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுகின்றன. இங்கு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இத்திட்டம் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் பிற மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட மேம்பாட்டு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: