பிரபல நகைக்கடையில் போலி காசோலை கொடுத்து 45 லட்சம் நகை மோசடி: 3 ஊழியர்களுக்கு வலை

தாம்பரம்: பிரபல நகைக்கடையில் போலி காசோலை கொடுத்து 45 லட்சம் நகை மோசடி செய்த ஊழியர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் அருகே பிரபல நகைக்கடை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்,  இந்த நகைக்கடை சார்பில் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில், எங்களது நகைக்கடையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உதவி மேலாளராக வேலை செய்த பார்த்திபன், வெங்கடேசன், நம்மாழ்வார் ஆகியோர் தற்போது வேலையில் இருந்து நின்றுவிட்டனர். இவர்கள், சென்ற பிறகு வரவு, செலவு கணக்குகளை சரிபார்த்தபோது, இந்த மூவரும் போலி காசோலையை கொடுத்து 45 லட்சம் மதிப்பில் நகை மோசடி செய்தது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டு இருந்தது.

அந்த புகாரின்பேரில் போலீசார் ஒரு வாரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியபோது பார்த்திபன், வெங்கடேசன், நம்மாழ்வார் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த தாம்பரம் காவல் நிலைய போலீசார் தலைமறைவாக உள்ள மூவரையும் தேடி வருகின்றனர். „  குரோம்பேட்டை, லட்சுமிபுரம், அரங்கநாதசுவாமி 2வது தெருவில் மழலையர் பள்ளி உள்ளது. இதனை நேற்று  முன்தினம் மாலை நிர்வாகி தர் மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல வந்து பார்த்தபோது பள்ளி கதவின் உடைக்கப்பட்டு அறையிலிருந்த 46,500 ரூபாய், கம்ப்யூட்டர் உள்ளிட்டவை திருடப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து   விசாரித்து வருகின்றனர்.

Related Stories: