குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் மத நல்லிணக்கத்தை அரசு சிதைக்கிறது: மம்தா குற்றச்சாட்டு

கிருஷ்ணாநகர்: குடியுரிமை திருத்த சட்டத்தை வலுக்கட்டாயமாக அமல்படுத்துவதன் மூலம், நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை மத்திய அரசு சிதைக்கிறது,’ என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதில், இம்மாநில முதல்வரும் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜ., பொய் செய்திகளை தருவதில் ஆர்வம் காட்டி வருகிறது. நாட்டை மதத்தின் பெயரால் பிரிக்க முயற்சிப்பதுடன், மக்களையும் துப்பாக்கி குண்டுகளால் மிரட்டி வருகிறது. நான் இந்துஸ்தானில் பிறந்தேன். மக்களை துப்பாக்கி, குண்டுகளால் தாக்கும் பாஜ ஆளும் நாட்டில் பிறக்கவில்லை. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை வலுக்கட்டாயமாக அமல்படுத்த முயற்சிப்பதன் மூலம் நாட்டின் மதநல்லிணக்கத்தை மத்திய அரசு சிதைத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: