பாலியல் வழக்கு தொடர்பாக நித்தியானந்தாவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூர்:  நித்தியானந்தாவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சை சாமியாரான நித்யானந்தா மீது 2010ல் பாலியல் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் பெற்று நித்தியானந்தா வெளியே வந்துள்ளார். பாலியல் வழக்குத் தொடர்பாகக் கடந்த 9 ஆண்டுகளாகக் கர்நாடக ராம் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும்,  லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில், ராம்நகர நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.  பாலியல் புகாரில் சிக்கியுள்ள நித்தியானந்தாவுக்கு எதிராக 2 வழக்குகள் மீது, கர்நாடக நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. பாலியல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது ராம்நகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 40 வாய்தாக்களுக்கு மேல் நித்தியானந்தா நேரில் ஆஜராகவில்லை.

இதனை தொடர்ந்து, அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று  நேற்று முன்தினம் மீண்டும் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார் லெனின் கருப்பன். லெனின் கருப்பனின் மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நரேந்திரா முன்பு விசாரணைக்கு வருகிறது. இதேபோல் நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்யகோரிய மற்றொரு வழக்கு, நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் நித்தியானந்தா தரப்பு மற்றும் கர்நாடக போலீசார் ஏன் நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்யக் கூடாது?  என்பதற்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. இதனை தொடர்ந்து, இன்று நடத்திய விசாரணையில் பாலியல் பலாத்கார வழக்கில் நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்து கர்னாடக  உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: