மகாராஷ்டிராவில் கல்லூரி வாசலின் முன்பு தீ வைத்து கொளுத்தப்பட்ட பெண் விரிவுரையாளர்: போலீசார் நடவடிக்கை

மும்பை:  மகாராஷ்டிரத்தில் கல்லூரியில் பணியாற்றி வரும் பெண் விரிவுரையாளர் ஒருவர் கல்லூரி வாசல் முன்பே உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரம் மாநிலம் விதர்பா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அன்கிதா என்பவர் பெண் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திங்கட்கிழமை காலை 7 மணியளவில் அவர் தனது கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, கல்லூரியின் வாசலில் மர்ம நபர் ஒருவர் வந்து அன்கிதாவின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்றார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 40 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரஞ்ச் சிட்டி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அனுப் மரார் மேலும் இதுபற்றி கூறுகையில், அன்கிதாவுக்கு மிகவும் மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. தலை, முகம் மற்றும் கழுத்து ஆகியவற்றில் ஏற்பட்ட தீக்காயங்களில் பெரும்பாலானவை,  அவரது சுவாச மண்டலத்தையே பாதித்துள்ளன. ஆகையால், அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ”என தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதன் பின்னணியில் உள்ள காரணத்தை கண்டறிவதாகவும் வர்தா போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்வீவர் பாண்டிவர் உறுதி அளித்துள்ளார். அதன்படி, தீ வைத்து விட்டு தப்பி சென்ற பிக்கேஷை கைது செய்த போலீசார்,  அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதில், ஏற்கனவே திருமணமான அவர் ஒருதலை காதல் காரணமாக பெண் விரிவுரையாளர் மீது தீ வைத்து எரித்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories: