சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் நுழையவும் இந்தியாவில் இருந்து சீனா பயணிக்கவும் தரப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து : கொரோனா பரவலை குறைக்க இந்தியா நடவடிக்கை

டெல்லி : கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டினருக்கு வழங்கிய விசாவை இந்தியா ரத்து செய்தது. சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் நுழையவும் இந்தியாவில் இருந்து சீனா பயணிக்கவும் தரப்பட்டு இருக்கும் அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் 425 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக கொரோனா வைரஸின் தாக்கத்தை இந்தியாவில் கட்டுப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம், சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரவும் இந்தியாவில் இருந்து சீனா செல்வதற்கும் வழங்கப்பட்ட விசா மற்றும் இ - விசா ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது. இந்தியாவுக்கு கட்டாயம் வர வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அல்லது ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் உள்ள இந்திய துணை தூதரங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு ஏற்கனவே சீனாவில் இருந்து இந்தியா வந்துள்ளவர்கள் உடனடியாக டெல்லியில் உள்ள மத்திய சுகாதார அமைச்சகத்தை தொடர்பு கொள்ளுமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய அறிவிப்பின் மூலம் சீன குடிமக்கள் மட்டுமின்றி சீனாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களும் இந்தியா அளித்துள்ள விசாவை பயன்படுத்த முடியாது. சீனாவில் இருந்து இந்தியா வந்தவர்களும் புதிய விசா பெறாமல் திரும்பிச் செல்ல முடியாது. அதே நேரம் பிப்ரவரி 8 முதல் டெல்லி - ஹாங்காங் இடையிலான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Stories: