பாகிஸ்தானில் இந்து கோயிலை சேதப்படுத்திய நான்கு சிறுவர்கள் விடுதலை: புகார் திரும்ப பெறப்பட்டதால் நடவடிக்கை

லாகூர்: பாகிஸ்தானில் இந்து கோயிலை சேதப்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள் மீதான புகார் திரும்பப் பெறப்பட்டதால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தர்பார்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து கோயிலின் சிலையை, 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள் கடந்த 26ம் தேதி சேதப்படுத்தியதாக பிரேம் குமார் என்பவர் புகார் அளித்தார். அந்த  புகாரின் அடிப்படையில் 4 சிறுவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி, பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சிறுவர்கள் மித்தி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் சிலைகளை சேதப்படுத்தியதையும் உண்டியலில் இருந்த பணத்தை திருடியதையும் ஒப்புக்  கொண்டனர்.

இந்த விசாரணையின் போது, புகார் அளித்த பிரேம் குமார், சிறுவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சிறுவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.  நல்லெண்ண அடிப்படையில் குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Related Stories: