அமைச்சரவை விரிவாக்கம் எடியூரப்பாவுக்கு அனுமதி : 11 பேருக்கு அமைச்சர் பதவி

பெங்களூரு : கர்நாடகா அமைச்சரவையை விரிவுபடுத்த முதல்வர் எடியூரப்பாவுக்கு பாஜ மேலிடம்  அனுமதி வழங்கியுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநில அமைச்சரவையில் மொத்தம் 34 அமைச்சர்களுக்கு இடம் உள்ளது. இதில் 18 பேர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். 16 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, அமைச்சரவை விரிவுப்படுத்த எடியூரப்பா பல மாதமாக முயன்று வருகிறார். இந்நிலையில், இது பற்றி விவாதிக்க டெல்லி சென்ற எடியூரப்பா, பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை  அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.

அதில், அமைச்சரவை விரிவாக்கத்தில் 11 பேருக்கு வாய்ப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு எடியூரப்பா அளித்த பேட்டியில், ‘‘பாஜ தலைமை அனுமதி அளித்து விட்டதால், அடுத்த மூன்றே  நாளில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். அதில் இடம் பெறுபவர்களின் பட்டியலும் தயாரிக்கப்படும்,’’ என்றார். இந்த விரிவாக்கத்தில் பாஜ ஆட்சியில் அமர்வதற்காக கட்சித் தாவிய காங்கிரஸ், மஜத.வை சேர்ந்தவர்களுக்கு  வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிகிறது.

Related Stories: