பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கூலி தொழிலாளி போக்சோவில் கைது

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை வ.ஊ.சி நகர் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (42). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி  தினமும் பள்ளிக்கு செல்லும்போது பின்தொடர்ந்து, சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். மாணவியின் உறவினர்கள் அவரை அடித்து உதைத்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக திருவொற்றியூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

* வில்லிவாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜேந்திரன் (33) என்பவர், தனது மனைவி இறந்த துக்கத்தில், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* புளியந்தோப்பு திருவிக நகர் 1வது தெருவை சேர்ந்த நார்மன் (30) என்பவர், குடும்ப தகராறில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* குரோம்பேட்டை, டி.எஸ்.லஷ்மன், முதல் தெருவைச் சேர்ந்த சரவணன் (33), நேற்று முன்தினம் குடும்ப தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* அண்ணாநகரை சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர் மகேஷ்வரன் (28) என்பவர், பஸ்சுக்காக காத்திருந்தபோது, விலை மதிப்புள்ள செல்போனை பைக் ஆசாமிகள் பறித்து சென்றனர்.

* முடிச்சூர், லட்சுமி நகர், நேதாஜி 1வது தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (62). இவர் தனது மனைவி வனஜா (54) என்பவருடன் தகராறில் ஈடுபட்டு, அம்மிக்கல்லால் தலையில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த வனஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனர்.

Related Stories: