பெரியகுளம் அருகே பதற்றம் இருதரப்பு இடையே மோதல் 2 பேர் அடித்து கொலை

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் சிலர் கஞ்சா விற்று வந்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரியகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா விற்பனையாளர்கள் புகார் கொடுத்தவர்களின் வீட்டை தாக்கி தகராறில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் தலையிட்டதால் நிலைமை சீரானது. இருதரப்பும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் கஞ்சா விற்பனைக்கு எதிராக புகார் கொடுத்தவர்கள் பாதுகாப்பு கேட்டு நேற்று காலை பெரியகுளம் டிஎஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Advertising
Advertising

இதையறிந்த கஞ்சா விற்ற தரப்பினர், காவல்துறையிடம் புகார் கொடுத்தவர்களை நேற்று மதியம் சரமாரியாக தாக்கினர். பதிலுக்கு புகார் கொடுத்த தரப்பினரும் தாக்குதல் நடத்தினர். இதில் கஞ்சா விற்ற தரப்பை சேர்ந்த ஜெயபால் (55) படுகாயமடைந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார்.இதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த பெருமாள் (75) என்பவரும் உயிரிழந்தார். கஞ்சா விற்பனையாளர்களை தடுக்காததால் தங்கள் தரப்பில் உயிர்ப்பலி ஏற்பட்டுவிட்டதாக கூறி, பெருமாள் தரப்பினர் தேனி - திண்டுக்கல் சாலையில் உடலை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Related Stories: