மண் கடத்திய லாரி பறிமுதல் விஏஓவுக்கு அதிகாரி மிரட்டல்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்

பொங்கலூர்: கிராவல் மண் ஏற்றி சென்ற லாரியை பறிமுதல் செய்த விவகாரத்தில் விஏஓவுக்கு, வருவாய் துறை அதிகாரி மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு கிராம நிர்வாக அலுவலரின் செல்போன் எண்ணுக்கு வருவாய் அதிகாரி ஒருவர் தொடர்பு கொள்கிறார். பின்னர் செல்போனில் அந்த வருவாய் அதிகாரி கிராவல் மண் ஏற்றி சென்ற லாரியை பறிமுதல் செய்தது தொடர்பாக பேசுகிறார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சட்டத்துக்கு புறம்பாக மண் ஏற்றி சென்ற லாரியை தான் பிடித்ததாக கூறுகிறார்.

Advertising
Advertising

அதற்கு வருவாய் அதிகாரி முறைப்படி தான் கிராவல் மண் ஏற்றி செல்கிறார்கள் என்று கிராம நிர்வாக அலுவலரை மிரட்டும் விதத்தில் பேசுகிறார். இந்த ஆடியோ பொங்கலூர் பகுதியில் உள்ள வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து, திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அந்த அதிகாரி கூறியது மிக தவறானது. இதுகுறித்து, வருவாய் அலுவலர் சுகுமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதில், சம்பந்தப்பட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: